vind எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

கையில் ஆயுதம் ஏந்தி வாடி!!

கையில் ஆயுதம் ஏந்தி வாடி!!

கொள்கைகள் கொட்டிக் கிடக்குதிங்கு கோடி

கடைப்பிடிக்க ஒருத்தனும் இல்லை போடி;

உரிமை என்றால் உரக்க குரல் கொடுக்குறான்டி,

கடமை என்றால் கடையினில் ஓடி ஒழியுறான்டி;

ஈழத்தின் இடுப்பை ஒருவன் ஒடிக்குறான்டி,

தாயகம் திரும்புவோரை இவன் ஏளனமாய் நடத்துறான்டி;

நாளொரு கட்சி இங்கு தோன்றுதடி,

நாகரிகம் அறியாதவனெல்லாம் அதில் தலைவனான்டி;

ஆட்சியை அமைக்க ஆயிரம் சொல்லுறான்டி ,

அமைந்ததும் அதில் எதை இவன் செய்யுறான்டி?

அரசியல் உலகின் அடிப்படையாய் திரைத்துறையாச்சுதடி,

வருகிறவனெல்லாம் மக்களிடம் நல்லாவே நடிக்கிறான்டி…

வரி செலுத்த எல்லாரும் வரமாட்டேன்கிறான்டி ,

விலைவாசி விவசாயி முதுகெலும்பை முறிக்குதான்டி;

‘கடவுள்’ கதை சொல்பவன் கால்களில் விழுகிறான்டி,

சாதகம், சோதிடம்னு சிக்கி அழியுறான்டி;

எதையும் யோசிக்கவே யோசிக்கிறான்டி,

சோதிடனின் யோசனை மட்டும் யாசிக்கிறான்டி;

‘மூடன்’ என்றால் முறைக்குறான்டி

பகுத்தறி(வு) என்றால் பகைக்குறான்டி;

என்றும் இவன் திருந்தமாட்டான்டி

திருடர் கூட்டம் இவனை திருந்த விடமாட்டான்டி;

புதியதோர் உலகம் படைத்திட நீ வாடி!


திருடர் கூட்டம் தீயில் கருகிட, கையில்

ஆயுதம் ஏந்தியே நீ வாடி!!!..


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்